காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வைத்து ராகுல் ஏன் நேரு பெயரை வைக்கவில்லை என கேட்டீர்கள். உங்களுக்கு எந்த நீதிபதியும் தண்டனை அளிக்கவில்லை என பிரதமர் மோடியே பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அதானியை பற்றி கேள்வி கேட்டால் ஏன் அதிர்ச்சியாகிறீர்கள்? உங்களைப் போன்ற ஒரு கோழைத்தனமான, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது. நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.