பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வி பயிற்றுவிக்க யுஜிசி அங்கீகாரம் அவசியம் என யுஜிசி அறிவித்துள்ளது. தமிழக அரசின் உயர்நிலை கல்வித் துறையின் கீழ் பல பல்கலைகள் இயங்கி வருகின்றன. இதில் திறந்தநிலை, தொலைநிலை ஆன்லைன் மூலமாக பட்டப்படிப்புகளை நடத்த யுஜிசி முறையான அங்கீகாரம் பெற வேண்டும். இதற்காக பல்கலைகள் மார்ச் 15 முதல் 31க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று யுஜிசி வலியுறுத்தி உள்ளது.