திண்டிவனம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் மேல் மலையனூர் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தீவனூர் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 4 பேரும் பரிதாபகமாக உயிரிழந்தனர்.
