ஜவுளி, காகித தொழிலில் மிகப்பெரிய நிறுவனமாக டிரிடென்ட் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக ரஜிந்தர் உள்ளார். இவர் தொடக்கத்தில் 9ம் வகுப்பு படிப்பை படித்துவிட்டு பின்னர் படிப்பை பாதியில் கைவிட்டவர். இதனையடுத்து அவர் தன்னுடைய  14 வயதில் ரூ.30க்கு தினக் கூலியாக வேலை பார்த்துள்ளார்.

இந்நிலையில் 1991ல் கூட்டுத்தொழில் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, டிரிடென்ட் நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது அவருக்கு ரூ.12,368 கோடி, டிரிடென்ட் நிறுவனத்துக்கு ரூ.17,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.