நம் அன்றாட வாழ்வில் ரூபாய் நோட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் ரூபாய் நோட்டுக்களை கடைகளில் வாங்க மறுப்பார்கள். காரணம் என்னவென்றால் நாம் கவனிக்காத விதமாக சிறு கிழிச்சல் அல்லது கறை ஏதாவது அந்த நோட்டில் இருந்தால் அதனை வாங்க மறுத்து விடுவார்கள். இப்படியான நேரத்தில் அந்த ரூபாய் நோட்டுகளை நாம் வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும். அதே சமயம் கறை படிந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விதிகள் பற்றி சொன்னால் கடைகளில் கட்டாயம் வாங்க தான் வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் சிதைந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். ஆனால் கிழிந்த நோட்டை பொறுத்து உங்களுக்கு பணம் கிடைக்கும். 78 சதுர சென்டிமீட்டர் அளவு மீதம் இருந்தால் வங்கிகள் உங்களுக்கு முழு தொகையை அப்படியே கொடுத்து விடும். ஆனால் 39 சதுர சென்டிமீட்டர் அளவுக்கு மட்டுமே மீதி இருந்தால் அப்போது பாதி பணம் மட்டுமே கிடைக்கும்.