வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சென்ற மாதம் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் அஜித்துக்கு புதுவேகத்தை தந்திருக்கின்றது. இத்திரைப்படத்தை அடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. சென்ற வருடம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவனின் கதை அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டாராம். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஏகே 62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகின்றார் என கூறப்பட்டது. ஏகே 62 திரைப்படத்தை இயக்குவது மட்டும் தான் மகிழ் திருமேனி, ஆனால் கதை பி.எஸ்.மித்ரன் உடையது என சொல்லப்பட்டது. மித்ரன் கதை என்றால் படம் செமயா இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில் மகிழ் திருமேனியை உறுதி செய்யவில்லையாம். ஏகே 62 திரைப்படத்தை யாருமே இயக்காத ஒருவர்தான் இயக்க இருப்பதாக கூறப்படுகின்றது. பிரபலம் இல்லாத ஒரு இயக்குனர் தான் ஏகே 62 திரைப்படத்தை இயக்க தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. மேலும் ஏகே 62 திரைப்படத்தின் கதை ஒரிஜினல் இல்லை என்றும் அது சூப்பர் ஹிட் அடித்த திரைப்படத்தின் ரீமேக் எனவும் சொல்லப்படுகின்றது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் அழ்ந்துள்ளனர்.