சித்தார்த் கியாராவிடம் நடிகர் ராம்சரணின் மனைவி மன்னிப்பு கேட்டுள்ளார்.

பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் நடிகை கியாரா அத்வானியும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று முன்தினம் இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரியக்கார் அரண்மனையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் குடும்பத்தார், பிரபலங்கள் என சிலர் மட்டுமே பங்கேற்றார்கள்.

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இவர்களின் திருமணத்திற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா சித்தார்த், கியாராவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சோசியல் மீடியாவில் உபாசனா கூறியுள்ளதாவது, “வாழ்த்துக்கள். இது மிகவும் அழகாக இருக்கிறது. எங்களால் திருமணத்திற்கு வர முடியவில்லை. சாரி” என தெரிவித்திருக்கின்றார்.