நடிகர் விஜய் பற்றி ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். விஜயின் அடுத்த தளபதி 68 திரைப்படத்தை அவருக்கு ராசியான இயக்குனர்களின் ஒருவர் என பெயர் எடுத்த அட்லீ இயக்க இருக்கிறாராம்.

அட்லீ விஜய் கூட்டணி சேர்ந்தாலே சூப்பர் ஹிட் தான் என்கிறார்கள் ரசிகர்கள். ஏற்கனவே விஜய்-ஐ வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கிய அட்லீ நான்காவது முறையாக விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் வம்சி இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.