இயக்குனரும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் திருமணம் செய்து கொண்ட நிலையில் சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்கள். இதன் பிறகு இருவருமே அவரவர்களின் கெரியரில் பிஸியாகி விட்டார்கள். தற்போது ஐஸ்வர்யா லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். அந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கின்றார்.

ஐஸ்வர்யா  உடற்பயிற்சி, சைக்கிளிங் ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அந்த வீடியோவையும் பகிர்ந்து வருகின்றார். இந்த நிலையில் நடிகர் பிரபுதேவா உடன் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். மேலும் அதில் பிரபு தேவா அண்ணா ரப்பர் மனிதன் என குறிப்பிட்டிருக்கின்றார்.

View this post on Instagram

 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)