வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்ற ஜனவரி 11-ஆம் தேதி துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதே தேதியில் விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆனதால் இரு திரைப்படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதன்பின் இரண்டு திரைப்படங்களுமே சமமான அளவு விமர்சனங்களை பெற்றது. வாரிசு திரைப்படம் குடும்ப ரசிகர்களின் ஆதரவை பெற்றது. துணிவு திரைப்படம் இளைஞர்களின் ஆதரவை பெற்றது. வசூலிலும் துணிவு திரைப்படம் அல்லியது.

இதற்கு முன்பாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தற்போது வினோத்-அஜீத் கூட்டணியில் வெளியாகி இருக்கும் துணிவு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கின்றது. அஜித்-வினோத் கூட்டணியில் மூன்றாவதுதாக உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கின்றார்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றதால் அஜித் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் துணிவு திரைப்படத்தின்போது அஜித்திற்கும் போனிகபூருக்கும் இடையே மனஷ்டாபம் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. அஜித்தின் சம்பளத்தை தர போனி கபூர் தாமதம் செய்ததாகவும் இதனால் கோபமடைந்த அஜித் பைக் ரைடு சென்றதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றது. இது உண்மையா? வதந்தியா? என்பது தெரியவில்லை குறிப்பிடத்தக்கது.