தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தற்போது இறைவன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாரா ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கின்றார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க அகமது இயக்குகின்றார். அண்மையில் படக்குழுவினர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

இத்திரைப்படத்தை பேஷன் ஸ்டூடியோ தயாரிக்கின்ற நிலையில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் இப்படம் குறித்து பேசி உள்ளதாவது, ஜெயம் ரவி நயன்தாராவுடன் ஒரு சுவாரசியமான கதைகளை இயக்குனர் அஹமத் உருவாக்கியுள்ளார். மேலும் திட்டமிட்டபடி படபிடிப்பை நிறைவு செய்து தந்திருக்கின்றார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக்கும். ஆக்ஷன் திரில்லர் கதையாக இருந்தாலும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சினிமா பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் அனைவருக்கும் நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமையும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.