ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த  திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகி இருக்கின்றது.

இந்த படம் உலகம் முழுவதும் தற்போது வரை 1.9 பில்லியன் யூஎஸ் டாலர் வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. இது இந்திய மதிப்பில் 15460 கோடியாகும். அமெரிக்காவில் மட்டும் 572 மில்லியன் வசூலும் மற்ற நாடுகளில் 1.35 மேல் பில்லியன் செய்திருக்கின்றது. வசூலை அதிக அளவில் குவித்த திரைப்படங்களில் அவதார் 2 தற்போது 6-வது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது. இந்தியாவில் மட்டும் இரு திரைப்படம் 57 மில்லியன் வசூலை கடந்திருக்கின்றது. இது இந்திய ரூபாயில் 463 கோடியாகும். இந்தியாவையில் அதிகளவு வசூலை குவித்த திரைப்படங்களில் அவதார் 2 திரைப்படம் முதல் இடத்தில் இருக்கின்றது.