விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் சென்ற 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இந்தப் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இத்திரைப்படம் விஜய் ஆன்டனி திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்தும் வருகின்றார். இத்திரைப்படத்தின் மூலமாக அவர் இயக்குனராக என்ட்ரி கொடுக்கின்றார்.

இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது நடந்து வருகின்றது. படத்தின் சண்டைக் காட்சிகள் மலேசியாவில் நடத்தப்பட்ட போது விஜய் ஆண்டனிக்கு படகு விபத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் பட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் விஜய் ஆண்டனியின் உடல் நலம் குறித்து தெரிவித்திருக்கின்றார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, விபத்தினால் ஏற்பட்ட காயத்திலிருந்து விஜய் ஆண்டனி விரைவாக குணமாகி வருவார். லங்காவில் இருக்கும் மருத்துவமனையில் அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றார். அவருடன் அவரின் குடும்பத்தினரும் இருக்கின்றார்கள். அவரை சென்னைக்கு அழைத்து வருவது பற்றி அவர்கள் முடிவு எடுப்பார்கள். விஜய் ஆண்டனி விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்திப்போம் என பதிவிட்டு இருக்கின்றார்.