
சோனு சூட் வீடியோ வைரலாகி வருகின்றது.
பாலிவுட் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் நடிகர் சோனு சூட். இந்த நிலையில் அவரின் ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் தேநீர் கடை ஒன்றில் நின்று கொண்டு அவர் தொழிலாளர்களிடம் பேசுகின்றார். அவர்களிடம் வாழ்வதற்காக என்ன செய்கின்றீர்கள் எனக் கேட்க அப்போது ஒருவர் குட்கா, பான் மசாலாவை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார். இதை கவனித்த சோனு குட்கா சாப்பிடுகின்றீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு தொழிலாளி ஆம் எனக் கூற முதலில் அதனை துப்பி விட்டு வாருங்கள் என கூறுகின்றார்.
இதன் பிறகு அந்த தொழிலாளி கொஞ்சம் தூரம் சென்று அதனை துப்பிவிட்டு வருகின்றார். உடனே சோனு சூட் அப்படியே ஓடி விடாதீங்க எனக் கூற அந்த தொழிலாளி மீண்டும் சோனுவிடம் வருகின்றார். அவர்களிடம் அன்பாக இனி இதை சாப்பிடாதீங்க. உங்களின் குடும்பத்திற்காக இதனை தியாகம் செய்யுங்க. ஏனென்றால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிவிக்கின்றார். மேலும் அங்கிருந்த கடைக்காரரிடம் அந்த நபருக்கு குட்கா கொடுக்காதீங்க என கூறுகின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
गुटका खाने वालों को सोनू सूद ने प्यार से सिखाया सबक@SonuSood@SoodFoundation#sonusood #ViralVideos #Sachtaknews pic.twitter.com/47XO9l341E
— SACH TALKS (@SachTalks) January 15, 2023