அரபிக் குத்து பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து உலக அளவில் கவனம் பெற்றது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜானிடா காந்தி பாடியிருந்த அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ தற்போது யூடியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கின்றது. இதனை பட குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கின்றார்கள். இதனை தற்போது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றார்கள்.