
தமிழ் சினிமா உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகின்றார் பார்த்திபன். இவரின் ஒத்த செருப்பு திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் உலாவ விட்டு பலரின் பாராட்டுகளை பெற்று தேசிய விருது வெளிநாட்டு விருதுகளையும் இத்திரைப்படம் குவித்தது. இந்த நிலையில் அண்மையில் ஒரு சாட்டில் நான் லீனியர் படத்தை இயக்கியிருந்தார் பார்த்திபன். அந்த படத்திற்கும் பாராட்டுகள் குவிந்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் நடித்துள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில் இந்த வருடம் படம் தொடங்க போவதாக பார்த்திபன் தெரிவித்திருக்கின்றார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது, “இவ்வாண்டில்… இன்னொரு படம் துவங்குகிறேன்… அத்தலைப்பு ஒரு பெண்ணின் பெயர் கொண்டதாய் இருக்கும். ஆனால் அதனுள் ஒரு ஆண் பெயர் இருக்கும். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு டால் பரிசு! அனேகமாக அதிகமானவர்கள் கண்டுபிடிப்பீர்கள். எனவே ஒரு பொம்மை மட்டும் பரிசு என பதிவிட்டிருக்கின்றார். இவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களின் பதிலை தெரிவித்து வருகின்றார்கள்.
இவ்வாண்டில் …
இன்னொரு படம் துவங்குகிறேன்…
அத்தலைப்பு ஒரு பெண்ணின் பெயர் கொண்டதாய் இருக்கும்.ஆனால் அதனுள் ஒரு ஆண் பெயர் இருக்கும். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு doll பரிசு!
அனேகமாக அதிகமானவர்கள் கண்டுபிடிப்பீர்கள். எனவே ஒரு பொம்மை மட்டும் பரிசு. Ready 1..2..3 pic.twitter.com/rPCRevoQXq— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 14, 2023