சந்தானம் நடிக்கும் கிக் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சந்தானம். இவர் முதலில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குழு குழு. இந்நிலையில் தற்பொழுது பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு கிக் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். அர்ஜுன் ஜனயா இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிர்வனம் சார்பாக நவீன்ராஜ் தயாரிக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கிக் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.