எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சென்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியான திரைப்படம் துணிவு. இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், ஜான் கொக்கன், மகாநதி சங்கர் என பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். தற்போது இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
பலரும் படத்தை பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை மஞ்சு வாரியர் பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் “நீங்கள் நீங்களாவே இருந்ததற்கு நன்றி அஜித் சார்” என பதிவிட்டிருக்கின்றார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.
THANK YOU SIR! FOR BEING YOU! ❤️#AjithKumar #AK pic.twitter.com/pzGJFkVvXx
— Manju Warrier (@ManjuWarrier4) January 13, 2023