புதிதாக தனுஷ் இயக்கும் திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நானே வருவேன். இத்திரைப்படத்தில் இரு வேடத்தில் தனது அசுத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தனுஷ் தற்போது மீண்டும் இயக்குனராக களம் இறங்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என பன்முகத் தன்மைகளை கொண்ட தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார்.

இந்த நிலையில் மீண்டும் தனுஷ் படம் இயக்குகின்றார் என்ற செய்தி வெளியாகி இருக்கின்றது. மேலும் அந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாகவும் நடிகர்களின் பட்டியல் விவரம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாக இருக்கின்றது. அதன்படி இத்திரைப்படத்திற்கு “ராயன்” என தனுஷ் தலைப்பு வைத்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் இடையே பேசப்பட்டு வருகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.