பொள்ளாச்சி தங்கம் திரையரங்கில் புதுவிதமான டிக்கெட் தயாராகி வருகின்றது.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. மேலும் சென்ற டிசம்பர் 31-ம் தேதி டிரைலர் வெளியாகி படு வைரலானது. இத்திரைப்படம் வரும் 11-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் தங்கம் திரையரங்கில் தயாராகி வரும் துணிவு திரைப்படத்தின் முதல் நாள் முதல் பார்வைக்கான டிக்கெட் பணம் போல் அச்சடிக்கப்பட்டு தயாராகி வருகின்றது.