இயக்குனர் வினோத் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற 11-ம் தேதி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. சென்ற டிசம்பர் 31-ம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் துணிவு பட இயக்குனர் வினோத் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, டிஜிட்டல் மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாவதை இளைஞர்கள் விட்டுவிட்டு வியாபார போதையை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்னுடைய எல்லா திரைப்படங்களிலும் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகின்ற செய்தி இதுதான். அடுத்த தலைமுறை வாழ்வதற்கும் மொழியையோ நாட்டையோ காப்பாற்ற வேண்டும் என்றாலும் இதான் வழி. வியாபார போதையை வளர்த்துக்கலைனா கண்டிப்பா நீங்க மாட்டீப்பீங்க என தெரிவித்துள்ளார்.