நடிகர் பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள்.

ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி சிரஞ்சீவி நடிக்கும் வால்டர் வீரய்யா திரைப்படமும் பாலகிருஷ்ணா நடிக்கும் வீரசிம்மா ரெட்டி என இரண்டு முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கின்றார். மேலும் இந்த திரைப்படங்களில் ட்ரெய்லர்கள் வெளியாகி இருக்கின்றது.

அந்த ட்ரெய்லரில் ஹீரோயின் நெஞ்சில் சிகரட்டை போட்டு தனது வாயில் பிடிக்கும் காட்சி ஒன்று மின்னல் வேகத்தில் வந்து சென்றாலும் அது பலரையும் முகம் சுழிக்க வைத்திருக்கின்றது. இதைப் பார்த்த நெட்டிசன்களோ சிகரெட் பிடிப்பதே தவறான பழக்கம். இதைவேற ஒரு நடிகையின் மார்பில் சிகரெட்டை போட்டு பிடிப்பது சரியா? என அவரை கடுமையாக விளாசி வருகின்றார்கள்.