நடிகை ஹன்சிகா வெளிநாடுகளில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் காதலித்து பின்னர் பிரிந்து விட்டார்கள். இதன் பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமா உலகில் குறைய தொடங்கியது. தெலுங்கிலும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதூரியா என்பவரை சென்ற டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தனது கணவருடன் வெளிநாடுகளில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றார். பாரிஸ், செக் குடியரசின் ப்ராக், ஜெர்மனி, ஆஸ்திரியா என பல்வேறு நாடுகளில் ஹன்சிகா மோத்வானி தனது கணவருடன் ஹனிமூன் கொண்டாடி வருகின்றார். மேலும் தற்போது வியன்னா நகரில் கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.