நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு கொஞ்சம் டிராக் மாற்றி தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கே இயக்குனர் வம்சியின் கதையை தேர்வு செய்து இப்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார்.

வழக்கமான தெலுங்கு படங்களை போல இப்படமும் குடும்பத்தை சுற்றிய எமோஷனல் கதைக்களம் என கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தில்ராஜு அலுவலகத்தில் அண்மையில் தெலுங்கு சினிமா நடிகர் ராம்சரண் விஜயின் வாரிசு படத்தைப் பார்த்துள்ளார். பார்த்துவிட்டு படம் சூப்பராக இருக்கிறது என மனதார புகழ்துள்ளாராம். ரசிகர்களும் படத்தை காணத்தான் ஆவலாக வெயிட்டிங்.