“கொடுவா” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நிதின்சத்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகிய சென்னை -28 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் வாயிலாக பிரபலமடைந்தார். வெகு இடைவெளிக்கு பின் தற்போது இவர் கொடுவா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிக்பாஸ் புகழ், சம்யுக்தா, ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கின்றது. அதன்படி இத்திரைப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டிருக்கின்றார். மேலும் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்கள். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றது.