தி லெஜண்ட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த கடையின் உரிமையாளரான சரவணன், அவர்களே விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிககைகளுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக தி லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா நடித்திருக்கின்றார்.

இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். மேலும் ஒரு பாடலுக்கு யாஷிகா ஆனந்த் நடனமாடியுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் சென்ற ஜூலை 28ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி லெஜண்ட் சரவணன் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் நீங்கள் அனைவரும் காணும் வகையில் தி லெஜண்ட் விரைவில்… என பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவு ஓடிடி ரிலீஸ் ஆக இருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.