விஜய் குறித்து பிரபல நடிகை பேசியுள்ளார்.
சம்யுக்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். சில மாதங்களுக்கு முன் வெளியான ”துக்ளக் தர்பார்” திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தற்போது முன்னணி நடிகர் விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் விஜயின் குணாதிசயங்களை இவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, படப்பிடிப்பு தளத்தில் விஜய் தனது செல்போனை பயன்படுத்தியதே கிடையாது எனவும் கேரவனுக்கு கூட போக மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தொழில் மீது பக்தி காட்டும் நடிகர் எனவும் வாரிசு படத்தில் நான் புதுமுகம் என்றாலும் என்னிடம் பாகுபாடில்லாமல் பழகியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.