சமந்தா பதிவு வைரலாகி வருகின்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இந்த நிலையில் திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வுமன் சென்ரிக் திரைப்படங்களின் பேனர்களுக்கு ரியாக்ட் செய்த சமந்தாவின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகின்றது. சென்னையில் உள்ள திரையரங்க வளாகத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்களின் பேனர் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கை கடந்து செல்லும் போது நானும் என் சகோதரியும் திரைப்படத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை பார்த்தோம். அதில் அனைத்து படங்களின் பேனர்களும் பெண் முன்னணியில் இருப்பதை உணர்ந்தோம். தமிழ் சினிமா எவ்வளவு தூரம் வந்துவிட்டது! பத்து வருடங்களுக்கு முன்பு இது கற்பனை செய்ய முடியாததாக இருந்திருக்கும் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.