துணிவு திரைப்படத்தின் நீளம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டிரைலர் வெளியாகி படு வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் நீளம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதன்படி பட நீளம் டீசென்ட்டாக இருப்பது கூடுதல் பலமாக இருக்கும் என்பது தெரிகின்றது. ட்ரெய்லர் சென்ற டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகி இணையத்தில் சக்க போடு போட்டு வரும் நிலையில் பட வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.