அவெஞ்சர்ஸ் பட நடிகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாவ்க் என்ற வேடத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் ஜெர்மனி ரென்னர். மேலும் இவர் சென்ற 2008 ஆம் வருடம் வெளியான தி ஹார்ட் லாக்கர் திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் சென்ற 2010-ம்  வருடம் வெளியான தி டவுன் திரைப்படத்தில் நடித்ததற்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் தனது வீட்டிற்கு காரில் சென்று இருக்கின்றார். அப்போது பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக மோதி இருக்கின்றது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் அவரை விமானம் மூலமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஜெர்மி ரென்னர் ஆபத்தான நிலையில் இருக்கின்றார். ஆனால் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.