உலக அளவில் மத்திய ஜப்பானியர்கள் 90 வயதை தாண்டி 112 மற்றும் 100 வயது வரை வாழ்வதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஹரா ஹட்ச் பன் மி என்பது ஜப்பானியர்களின் ஒரு பழமொழியாகும். இதன் அர்த்தம் உணவை சரியான அளவு உண்ண வேண்டும். வயிறு 90 சதவீதம் நிரம்பும் வரை உணவை சாப்பிட்டால் போதும். இதனால் வயிற்றில் சுமை குறைந்து ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ முடியும். இதனால் ஜப்பானியர்கள் அதிக உணவை உட்கொள்ள மாட்டார்கள்.

அதே சமயம் சுகாதார விஷயத்திலும் அதிக அக்கறை கொண்டவர்கள். சிறு குழந்தைகளுக்கு கூட தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அடிக்கடி நடத்துகின்றனர். அனைத்து விஷயங்களிலும் தூய்மையை பின்பற்றுகின்றனர். இவர்கள் சாப்பிடுவதற்கு குறித்த ஒரு நேரத்தை ஒதுக்கியுள்ளனர். ஒரே தட்டில் சாப்பிடாமல் கிண்ணங்களில் மற்றும் சிறிய தட்டுகளில் சாப்பிடும் பழக்கம் உள்ளது.

அதேபோலவே சாப்பிடும் போது டிவி பார்க்க மாட்டார்கள், தொலைபேசியும் பயன்படுத்த மாட்டார்கள். தரையில் அமர்ந்து மிக மெதுவாக சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பெரும்பாலும் சமச்சீரான உணவுகளை உட்கொள்கின்றனர். தேநீர் குடிப்பதை அதிகம் விரும்புகின்றனர். இது அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகின்றது. அதன்படி இவர்களிடையே மட்சா தேனீர் என்பது மிகவும் பிரபலமானது. நடைப்பயிற்சி செய்வதை ஜப்பானியர்கள் தவறாமல் பின்பற்றுகிறார்கள். இவர்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையை வாழ்வது மிகவும் குறைவு. இவர்களில் காணப்படும்  DNA 5178 மற்றும் ND2-237Met ஆகிய இரண்டு மரபணுக்கள் அவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கின்றன.