கோலிவுட் சினிமாவில் 2023-ம் ஆண்டு ஏராளமான இரண்டாம் பாகப் படங்கள் வெளியாக இருக்கிறது. இதற்கு முன்பும் இரண்டாம் பாகப் படங்கள் வெளியானாலும் தற்போது அதிகளவிலான படங்கள் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஏப்ரல் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 படம் முதலில் இரண்டாம் பாகம் படமாக வெளியாகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 1000 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு தலைநகரம் 2, டிமான்டி காலனி 2, இந்தியன் 2, விடுதலை 2, சார்பட்டா பரம்பரை 2, சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2, பிச்சைக்காரன் 2 போன்ற படங்களும் வெளியாக இருக்கிறது. இதுபோக இன்னும் சில இரண்டாம் பாக படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் ஆலோசித்துக் கொண்டிருக்கிறதாம். மேலும் இந்த வருடம் வெளியாகப் போகும் 2-ம் பாகப் படங்களின் முதல் பாகங்கள் அனைத்தும் மாபெரும் அளவில் வெற்றி பெற்று சூப்பர் ஹிட் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.