பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்ததால் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்ட நிலையில் அமெரிக்காவில் தன் கணவருடன் குடியேறிவிட்டார். இவருக்கு தற்போது மல்டி மேரி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியின் போது எதற்காக நீங்கள் பாலிவுட் சினிமாவை விட்டு விலகினீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு பிரியங்கா நான் பாலிவுட் சினிமாவில் நான் ஓரம் கட்டப்பட்டேன். எனக்கு பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. அங்கு நடந்த அரசியல் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதே நேரத்தில் எனக்கு ஹாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்தது. மேலும் இதனால் தான் பாலிவுட் சினிமாவை விட்டு விலகி விட்டேன் என பிரியங்கா கூறினார். இது பிரியங்கா சோப்ராவின் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.