அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் சிகாகோ நகரைச் சேர்ந்த 38 வயதான கெல்லி கோசிரா, 2017ஆம் ஆண்டில் தனது நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றபோது, முதன்முதலில் கோக்கைன் என்ற போதைப் பொருளை பயன்படுத்தினார். அதன் பின்னர், அவர் அந்தப் பொருளுக்கு அடிமையாகி, சுமார் 70 லட்சம் ரூபாய் செலவழித்து, தொடர்ந்து அதை பயன்படுத்தி வந்தார்.

இந்தப் பழக்கத்தால், சில மாதங்களில், அவரது மூக்கில் தசைகள் கிழிந்து, ரத்தத்துடன் வெளியேறியது. அதை அவர் முதலில் கவனிக்கவில்லை; ஆனால், பின்னர் அவரது மூக்கில் ஓட்டை உருவாகியது. அவரது குடும்பத்தினரின் உதவியுடன், 2021ஆம் ஆண்டில் அவர் போதைப் பொருள் பழக்கத்தை நிறுத்தி, அதன் பின்னர், முகத்தில் ஏற்பட்ட ஓட்டையை சரிசெய்ய 15க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், நெற்றியிலிருந்து தோல் எடுத்துக்கொண்டு, அவரது மூக்கை மீண்டும் வடிவமைக்கும் சிகிச்சையும் அடங்கும்.

தற்போது, காயங்கள் குணமடைந்து வரும் நிலையில், கெல்லி தனது அனுபவத்தை பகிர்ந்து, போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்துகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.