
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் நேற்று பணி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று பணி ஓய்வு பெற்றதால் அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிபதி பி.என் பிரகாஷ் கடந்த ஒன்பதரை வருடங்களில் 69,000 வழக்குகளை முடித்து வைத்திருக்கிறார் என்று கூறினார்.
அதோடு குற்றவியல் வழக்குகளில் நல்ல அனுபவம் பெற்ற நீதிபதியை இழப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி பிரகாஷ் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு தன் மீது ஏதேனும் கோவம் இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட 75 நீதிபதிகளில் 52 ஆக குறைந்ததால் தற்போது 23 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்