ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை கட்சியாக மாறி இருக்கிறது. இதனால் நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ளார்.  இதனால் சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உச்சம் தொட்டது. இந்த நிறுவனத்தில் சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரிக்கு 34.37 சதவீதம் பங்குகளும், மகன் லோகேஷுக்கு 10.82% பங்குகளும், மருமகள்  0.46 பங்குகளும், அவருடைய ஒன்பது வயது பேரனுக்கு 0.06 பங்குகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

பேரன்  வைத்திருக்கும் 56,075 பங்குகளின் மதிப்பு ஜூன் 3 -ம் தேதி ரூ.2.4 கோடியாக இருந்த நிலையில் ரூ.4.1 கோடியாக அதிகரித்துள்ளது. அதன்படி ஒரே வாரத்தில் அந்த சிறுவனுக்கு 1.7 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஹெரிடேஜ் புட்ஸ் மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் 52 வார அதிகபட்சமாக 727.9 எட்டியதால் 1225 கோடி லாபத்தை பெற்றுள்ளது.