புதுச்சேரி மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய 9 சனிக்கிழமைகள் வேலை நாளாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 24 வியாழக்கிழமை பாடத்திட்டம் படியும், ஜூலை 8ம் தேதி வெள்ளிக்கிழமை பாடத்திட்டம் படியும், ஜூலை 22 ஆம் தேதி திங்கட்கிழமை பாடத்திட்டம், ஆகஸ்ட் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாடத்திட்டம், ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதன்கிழமை பாடத்திட்டம், செப்டம்பர் ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை பாடத்திட்டம், செப்டம்பர் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாடத்திட்டம், அக்டோபர் 14ஆம் தேதி திங்கட்கிழமை பாடத்திட்டம், அக்டோபர் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாடத்திட்டபடி பள்ளிகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.