சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்று வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. டப்பிங் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் கலந்துகொண்ட 84 வயதான கவுண்டமணி 8 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசியுள்ளார். அரசியலை நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் யோகி பாபு நடித்துள்ளனர்.