போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸின் 8 வயது மகள் அலானா மார்டினா, தனது அபாரமான பாடும் திறமையால் இணையதளவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஜார்ஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், அலானா ‘டைட்டானிக்’ படத்தின் புகழ்பெற்ற பாடலான “My Heart Will Go On” என்ற பாடலை மிகவும் அழகாகப் பாடுகிறார்.
<a href=”http://
Ronaldo and Georgina’s daughter, Alana singing Céline Dion’s “My Heart Will Go On.” It is so impressive how stunning and powerful her voice is at just 8 years old 😳❤️ pic.twitter.com/boWD2toGNL
— 𝐀𝐬𝐚𝐤𝐲𝐆𝐑𝐍 (@AsakyGRN) January 15, 2026
“>
தனது வீட்டு உடற்பயிற்சிக் கூடத்தில் அமர்ந்து, மொபைல் போனில் வரிகளைப் பார்த்து அவர் பாடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிபலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
அலானாவுக்கு சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் அவர் ‘Frozen’ படத்தின் “Let it Go” மற்றும் “Let it Go” மற்றும் இigo குயின்டெரோவின் “Si No Estas” போன்ற பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.
ரொனால்டோ கால்பந்து களத்தில் சாதனை படைத்து வரும் நிலையில், அவரது மகள் இசையில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த சிறு வயதிலேயே அலானா காட்டும் இசை ஆர்வம், எதிர்காலத்தில் அவர் ஒரு சிறந்த பாடகியாக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
