மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தி வெளியாக உள்ளது. அதாவது ஏழாவது ஊதிய குழுவை அடுத்து விரைவில் எட்டாவது ஊதிய குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதம் அதிகமாக உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது.

பழைய கமிஷனை விட இந்த புதிய சம்பள கமிஷனில் பல மாற்றங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊழியர்களின் தற்போதைய குறைந்தபட்ச சம்பளம் 18000 ரூபாய். ஆனால் எட்டாவது ஊதிய குழுவின் படி ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 26 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.