மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வு எழுத தகுதியானவர்கள் https://sss.nic.in என்ற இணையதளம் மூலமாக வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு கணினி வழி தேர்வு ஆக ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும் வழக்கமாக எஸ்எஸ்சி போட்டி தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது எஸ்சி போட்டி தேர்வுகள் தமிழ்மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.