கர்நாடக அரசு 7-வது ஊதியக்குழுவை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு அதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறது. 7-வது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சுமார் ரூபாய்.6,000 கோடி நிதியை ஒதுக்கி இருப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்து உள்ளார்.

இப்போது மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படியை வழங்கி வரும் நிலையில், 7-வது ஊதியக்குழுவின் வாயிலாக தன் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (DA) 42 சதவீதம் ஆக உயர்த்தி வழங்கும் என ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மட்டுமல்லாமல் ஓய்வூதியதரர்களுக்கான அகவிலை நிவாரணத்திலும் அரசு திருத்தங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.