குஜராத் மாநிலம் பன்ஸ்கந்தா மாவட்டம் லுன்சேலா என்ற நகரில் குஜராத் சாமியார் சந்து ஸ்ரீ சாதாரம் பாபாவின் சிலையை நிறுவும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக கூடி தங்களுடைய சமூக பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்து 11 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டனர். அதில்மைனர் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்து குஜராத் தாக்கூர் சமூகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

செல்போன் மூலம் காதல். சாதி மறுப்பு திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நிச்சயதார்த்தத்துக்கு பிறகு திருமணத்தை நிறுத்தினால் அபராதம் விதிப்பது, திருமணத்தில் DJவுக்கு தடை உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டன.