மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது, 7-வது ஊதியக் கமிஷனுக்கு பின், 8-வது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமைக்கவுள்ளது. இது ஒரு முக்கிய காரணியாக இருக்க, இன்னும் பல்வேறு காரணங்களால் அடுத்த வருடம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என நம்பப்படுகிறது. மேலும் பிட்மென்ட் பாக்டரைத் தவிர்த்து வேறு ஒரு சூத்திரம் வாயிலாக ஊதியம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். பழைய ஊதியக் கமிஷனை விடவும் இந்த ஊதியக் கமிஷனில் அதிக மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

7வது ஊதியக் குழுவின் கீழ் இப்போது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக இருக்கிறது. 8-வது ஊதியக்குழுவின் கீழ் இந்த முறை பிட்மென்ட் பாக்டர் 3.68 மடங்கு இருக்கலாம் எனவும் அதன்பின் ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் ஆக உயரக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. இதனால் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் நேரடியாக ரூ.18,000-ல் இருந்து ரூ.26,000 ஆக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.