இந்தியாவில் முக்கியமான நகரங்களை இணைக்கும் நோக்கில் வந்தே பாரத் எனும் ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசானது தெரிவித்துள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக டெல்லி-வாரணாசி இடையில் வந்தே பாரத் ரயில் திட்டம் துவங்கப்பட்டது.

இதையடுத்து குஜராத்-காந்திநகர், அம்ப் அண்டவ்ரா- புதுடெல்லி போன்ற இடங்களுக்கு ரயில் இயக்கப்பட்டது. இப்போது தென் மாநிலத்தில் சென்னை- மைசூரு இடையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு பயண நேரம் குறைகிறது.

இதுபற்றி மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் பேசியதாவது, நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். இன்று கரூர் ரயில் நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட மத்திய அமைச்சர் இதுவரையிலும் நாட்டில் 12 வந்தே பாரத் அதி விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதோடு 100 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.