
விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் வேலம்மாள் என்ற 75 மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடூரமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பிய நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று சந்தேகத்தின் பேரில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆணையாளரின் மகன் ஜீவராஜன் (24) என்பவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும் அவர் அதுக்கு மறுப்பு தெரிவித்து கூச்சலிட்ட நிலையில் பயத்தில் கையில் இருந்த பேனாவால் குத்தி கொலை செய்ததாகவும் அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.