
மராட்டிய மாநிலம் அம்பர்நாத் என்னும் பகுதியில் 73 வயதான முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வயதான முதியவர் என்பதால் சகஜமாக அவரிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். பின் அவர் சிறுமியிடம் பேச்சு கொடுக்கத் தொடங்கிய நிலையில் சிறுமியின் வாயை துணியால் கட்டிக்கொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் சிறுமியிடம் இதைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது மீறி சொன்னால் உன்னை கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இருப்பினும் சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி அவருடைய பெற்றோரிடம் கூறினார். இச்சம்பவத்தை பற்றி அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தவுடன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்ததுடன் அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.