அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி  சற்று நேரத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாமகவை தங்கள் கூட்டணி பக்கம் இழுக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த சி.வி. சண்முகம், விருப்ப தொகுதிகளை தர தயாராக இருப்பதாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.