தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த வீடியோவில் பொதுமக்கள் அனைவரும் தன் மீது கொண்ட அன்பு காரணமாக தன்னை அப்பா, அப்பா அப்பா என்று அழைப்பதாக கூறியிருந்தார். முதல்வரை இந்த பேச்சைக் கேட்ட அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தாத்தா என்று கூப்பிட வேண்டியவரை அப்பா என்று கூப்பிடுவார்களா? 70 வயசுல தாத்தா என்றுதான் கூப்பிடுவார்கள்.

ஸ்டாலினை அப்பா என்று கூப்பிடுவதாக அவரே பேசிக் கொண்டிருக்கிறார். கெட் அவுட் திமுக என்றுதான் வரப்போகிறது. அதுதான் உண்மை. வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கெட் அவுட் திமுக என்று தான் வரும் அதனை நீங்களும் பார்க்கத்தான் போறீங்க. வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி தொடருமா அல்லது புதிய கூட்டணி உருவாகுமா  என்பது அப்போது தெரியும் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.