இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் என்ற நகரில் டேங்கோ நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் வழுக்கை தலையுடன் இருந்தால் அவர்கள் பணியில் இருக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதனால் வழுக்கை தலையுடன் இருந்தவர்கள் உடனடியாக மேனேஜரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த மார்க் ஜோன்ஸ் என்ற 60 வயதுடைய நபருக்கு தலையில் முடி நிறைந்திருந்த போதிலும் அவர் தவறுதலாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த வழக்கில் மேனேஜர் பிலிப்பை விசாரிக்கையில் “நான் வழுக்கை தலையுடன் இருக்கிறேன். இதேபோன்று அலுவலகத்தில் இருப்பவர்களும் வலுகை தலையுடன் இருப்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் ஆற்றல் மிகுந்த இளைஞர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் வேலைகள் விரைவாகவும் தெளிவாகவும் நடக்கும்” என்று கூறியுள்ளார். இந்த காரணத்தை நீதிபதி ஏற்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட நபரான மார்க் ஜோன்ஸுக்கு நஷ்ட ஈடாக 71 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.